ஐஸ்வர்யா ராஜேஷ் படம் தள்ளிவைப்பு


ஐஸ்வர்யா ராஜேஷ் படம் தள்ளிவைப்பு
x

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ”டிரைவர் ஜமுனா” படம் ரிலீஸ் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ், 'டிரைவர் ஜமுனா' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பெண் கால் டாக்சி ஓட்டுனரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை கார் ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஆடுகளம் நரேன், ஶ்ரீரஞ்சனி, அபிஷேக், பாண்டியன், கவிதா பாரதி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வத்திக்குச்சி படத்தை இயக்கி பிரபலமான கின்ஸ்லின் டைரக்டு செய்துள்ளார். டிரைவர் ஜமுனா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை நேற்று திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் டிரைவர் ஜமுனா ரிலீஸ் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தாமதத்துக்கு வருந்துவதாகவும், விரைவில் உங்கள் பார்வைக்கு படத்தை கொண்டு வருவோம் என்றும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story