திண்டுக்கல்லில் 'துணிவு' நள்ளிரவு காட்சி ரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி


திண்டுக்கல்லில் துணிவு நள்ளிரவு காட்சி ரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 10 Jan 2023 8:19 PM GMT (Updated: 10 Jan 2023 8:21 PM GMT)

திண்டுக்கல்லில் துணிவு நள்ளிரவு காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல்,

அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் உலகம் முழுவதும் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியாகியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ள துணிவு படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார் கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய் துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் 'துணிவு' படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம் தியேட்டர்களில் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டரில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது. துணிவு திரேட்டரில் வெளியான நிலையில் அஜித்குமார் ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் துணிவு திரைப்படத்தின் முதல்காட்சியான நள்ளிரவு 1 மணி காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ரசிகர்களின் தொடர் கூச்சலை அடுத்து 1 மணிநேரம் தாமதமாக இன்னும் சற்று நேரத்தில் நள்ளிரவு 2 மணிக்கு துணிவு தியேட்டரில் திரையிடப்பட உள்ளது.




Next Story