ரசிகர்களின் உச்சபட்ச ஆரவாரத்துடன் வெளியான அஜித்குமாரின் 'துணிவு'


தினத்தந்தி 10 Jan 2023 7:52 PM GMT (Updated: 10 Jan 2023 7:53 PM GMT)

அஜித்குமார் நடிப்பில் 'துணிவு' திரைப்படம் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது.

சென்னை,

அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் உலகம் முழுவதும் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியாகிய்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ள துணிவு படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார் கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய் துள்ளார். ஜிப்ரான் இசையமைத் திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் 'துணிவு' படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம் தியேட்டர்களில் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டரில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது. அஜித்குமாரின் துணிவு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Next Story