வைரலாகும் அஜித் மகள் புகைப்படம்


வைரலாகும் அஜித் மகள் புகைப்படம்
x

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் மகள் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தை சாலினி வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர், நடிகைகள் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரும் மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் புத்தாண்டு கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்களை ஷாலினி வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதில் மகள் அனோஷ்காவுடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அனோஷ்கா கதாநாயகிபோல் இருப்பதாக பதிவுகள் வெளியிட்டு வாழ்த்தி வருகிறார்கள்.

அஜித்குமார் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அஜித்குமார் கதாபாத்திரம் வில்லத்தனமாக சித்தரித்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது.

அடுத்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் டைரக்டு செய்யும் படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story