ஆலியா பட் நடிக்கும் 'ஜிக்ரா' படத்தின் புதிய போஸ்டர்!


ஆலியா பட் நடிக்கும் ஜிக்ரா படத்தின் புதிய போஸ்டர்!
x

ஆலியா பட் நடிக்கும் ஜிக்ரா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஹிந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலிய பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் அறிமுகமானார். கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார். ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.ஹாலிவுட்டில் ஆர்ட் ஆப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார் ஆலியா பட். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஆலியா பட் ராம் சரணின் காதலியாக சீதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ராஹா எனும் பெண் குழந்தை கடந்தாண்டு டிசம்பரில் பிறந்தது. சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் கணவர் ரன்பீருடன் லவ் அன்ட் வார் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வருடமும் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் நடிகை ஆலியா பட் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

ஜிக்ரா படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை வாசன் பாலா இயக்கியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்குப் பிறகு தற்போது ஆலியா பட் ஆல்பா படத்தில் நடித்துவருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story