இன்னொரு சரித்திர படம்... சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் அக்‌ஷய்குமார்


இன்னொரு சரித்திர படம்... சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் அக்‌ஷய்குமார்
x

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இதில் வீர சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரை தேர்வு செய்துள்ளனர்.

பாகுபலி படத்துக்கு பிறகு சரித்திர படங்கள் அதிகம் தயாராகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியும் சரித்திர படங்கள் எடுப்பதற்கான ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. இந்த படத்தில் வீர சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரை தேர்வு செய்துள்ளனர்.

வீர சிவாஜியாக நடிப்பது குறித்து அக்‌ஷய் குமார் கூறும்போது, ''நான் சதிரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜ் தாக்கரேயால் எனக்குஇந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. பழம்பெரும் ஆளுமையான மராட்டிய மன்னன் கதாபாத்திரத்தில்நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்கு என்னால் முடிந்த உழைப்பை கொடுப்பேன்'' என்றார். மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்டு செய்யும் இந்த படம் மாராத்தி மொழியில் தயாராகிறது. இதர மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.


Next Story