அந்தோணி தாசன் வில்லன் அவதாரம்


அந்தோணி தாசன் வில்லன் அவதாரம்
x

நாட்டுப்புற கலைஞரான அந்தோணி தாசன் சினிமா பின்னணி பாடகராகி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 378 பாடல்கள் பாடி உள்ளார்.

`சூதுகவ்வும்', `காக்கி சட்டை', `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `குக்கூ', `ரோமியோ ஜூலியட்', `சிகரம் தொடு', `ஜிகர்தண்டா', `ஆம்பள', `தானா சேர்ந்த கூட்டம்', `அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களில் பாடி இருக்கிறார். `எம்.ஜி.ஆர் மகன்', `அம்பு நாடு ஒம்பது குப்பம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சில படங்களில் நடித்தும் உள்ளார். தற்போது 'தல போச்சே' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். `இடி முழக்கம்', `வைரி' ஆகிய படங்களிலும் நடிக்கிறார். `ஆசை மச்சான்' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டு உள்ளார்.

அடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட `வந்தே மாதரம்' என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் பாடல் ஆல்பத்துக்கான படப்பிடிப்பை ஐவகை நிலங்களில் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.


Next Story