விமர்சனத்துக்கு அனுபமா பதிலடி


விமர்சனத்துக்கு அனுபமா பதிலடி
x

தமிழில் கொடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் தொடர் பட வாய்ப்புகளுடன் முன்னேறி வருகிறார். மலையாளத்திலும் நடிக்கிறார். தென்னிந்திய திரையுலகின் இளம் கதாநாயகியான அனுபமாவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

ஆனாலும் அவருக்கு ஒரிரு பெரிய நடிகர்களை தவிர பெரும்பாலும் பிரபலமில்லாத நடிகர்கள் படங்களிலேயே நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த அனுபமா இப்போது ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் நீங்கள் பெரிய கதாநாயகி ஒன்றும் இல்லை. அதனால்தான் பிரமாண்ட படங்களில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு வரவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு கதாநாயகிக்கான தகுதி இல்லை என்று விமர்சனம் செய்தார். இதற்கு அனுபமா, ''நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா. நான் கதாநாயகி இல்லை. ஆனால் நான் நடிகை ரகம் என்று பதில் அளித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புத்திசாலித்தமனாக பதில் அளித்துள்ளார் என்று பாராட்டி வருகிறார்கள்.

1 More update

Next Story