கதை நாயகனாக அப்புக்குட்டி


கதை நாயகனாக அப்புக்குட்டி
x

பார்த்திபன், தேவயானி நடிப்பில், `நினைக்காத நாளில்லை' மற்றும் `தீக்குச்சி', தெலுங்கில் `அக்கி ரவ்வா' ஆகிய படங்களை இயக்கிய ஏ.எல்.ராஜா, டைரக்டு செய்து தயாரிக்கும் புதிய படம் `சூரியனும் சூரியகாந்தியும்' இதில் அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் நாயகியாக நடிக்கிறார். சந்தான பாரதி, இயக்குனர் செந்தில்நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, செஞ்சி கே.அசோகன், சக்தி சொரூபன், ஏ.ஆர்.கே ஆனந்த், சேஷி உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் ஏ.எல்.ராஜா கூறும்போது ``சாதிக்க துடிப்பவனை சாதி எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதை உயிரோட்டத்தோடு படமாக்கி உள்ளோம். மக்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படமாக உருவாகி உள்ளது'' என்றார். ஒளிப்பதிவு: திருவாரூர் ராஜா, இசை: ஆர்.எஸ்.ரவி பிரியன்.

1 More update

Next Story