ஆஸ்கார் விருது அனுபவம் பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்


ஆஸ்கார் விருது அனுபவம் பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்
x

ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அந்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அமெரிக்காவில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா வருகிற 12-ந் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அந்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் 2 ஆஸ்கார் விருதுகளை வென்று அவற்றை பையில் வைத்து இந்தியாவுக்கு கொண்டு வந்தேன். விமான நிலையத்தில் பாதுகாப்புக்கு நின்றவர் என்னை காத்திருக்க சொன்னார். என்னை மாதிரி 100 பேர் காத்து இருக்கிறார்கள் என்று கூறினார். அதன்பிறகு எனது பையில் இருந்த ஆஸ்கார் விருதுகளை பார்த்து திகைப்பானார். அங்கு நின்ற அனைவருமே ஆச்சரியப்பட்டனர். கைதட்டினர்.

ஆஸ்கார் விருதுக்கு எனது பெயரை அறிவித்ததும் இது உண்மையா கனவா என்று நினைத்தேன். எல்லா புகழும் இறைவனுக்கு மட்டுமே உரியது. நான் இரண்டாவது முறை ஆஸ்கார் விருதை பெற்றபோது எனது வாழ்க்கையில் அன்பு இருந்தது. வெறுப்பும் இருந்தது. நான் அன்பை தேர்வு செய்தேன். அதனால் இங்கு நிற்கிறேன் என்றேன். அந்த கருத்தை சிலர் தவறாக புரிந்தனர். உலகில் எல்லா கலைஞர்களுமே கொடுக்க நினைக்கிறார்கள். அன்பும் கொடுப்பதுதான்'' என்றார்.


Next Story