அருள் நிதியின் பேய் படம் 2-ம் பாகம்


அருள் நிதியின் பேய் படம் 2-ம் பாகம்
x

அருள் நிதி நடிப்பில் வெளிவந்த டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் 7 வருடங்கள் கழித்து தயாராகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடித்து 2005-ல் வெளியான பேய் படம் 'டிமான்டி காலனி'. இதில் ரமேஷ் திலக், சனத் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது. தற்போது வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகம் படங்கள் தயாராவதை தொடர்ந்து 'டிமான்டி காலனி' 2-ம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது 7 வருடங்கள் கழித்து டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதற்கான பட வேலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. டிமான்டி காலனி 2 படத்தில் அருள் நிதியுடன் பிரியாபவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அஜய் ஞானமுத்து இயக்கி தயாரிக்கிறார். அருள் நிதி நடிப்பில் இந்த ஆண்டு டி.பிளாக், தேஜாவு, டைரி ஆகிய படங்கள் வந்துள்ளன.


Next Story