அருள்நிதி நடித்துள்ள 'டி பிளாக்' படத்தின் புதிய அப்டேட்..!


அருள்நிதி நடித்துள்ள டி பிளாக் படத்தின் புதிய அப்டேட்..!
x

நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'டி பிளாக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் அருள்நிதி, தற்போது யூடியூப் பிரபலம் விஜய்குமார் இயக்கத்தில் 'டி ப்ளாக்' படத்தில் நடித்துள்ளார். அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார்.

இந்த படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரித்துள்ளார். ரான் எதன் யோஹான் இசையமைத்துள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி டிபிளாக் திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.Next Story