'அச்சம் என்பது இல்லையே-மிஷன் சாப்டர் 1' டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய்!


அச்சம் என்பது இல்லையே-மிஷன் சாப்டர் 1 டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய்!
x

'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் தொடங்கியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் தொடங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Next Story