இணையத்தில் வைரலாகும் அருண் விஜய் படத்தின் பாடல்..!


இணையத்தில் வைரலாகும் அருண் விஜய் படத்தின் பாடல்..!
x

'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

சென்னை,

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிட உள்ளது.

'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது .இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அச்சமே அச்சமே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Next Story