அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 'குற்றம் 23' படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பார்டர்'. இந்த படத்தில் நடிகை ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த நிலையில், 'பார்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story