ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' படத்தின் புதிய அப்டேட்..!


ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தின் புதிய அப்டேட்..!
x

நடிகர் ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' படத்தின் 'கைலா' பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'டெடி' மற்றும் 'சார்ப்பட்டா பரம்பரை' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால், இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

'கேப்டன்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், 'கேப்டன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் 'கைலா' பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் யாசின் நிஷார் இணைந்து பாடியுள்ளனர்.



Next Story