அசோக் செல்வன் நடித்துள்ள 'வேழம்' படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள 'வேழம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'வேழம்'. இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் ஆகாஷே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வேழம் படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதி செய்துள்ளார். ஏ.கே.பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.ஜானு சாந்தர் இசையமைத்துள்ளனர். வேழம் திரைப்படம் வருகிற ஜூன் 24-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சுவாரஸ்யமான கொலை மர்ம திரில்லராக வேழம் படம் உருவாகியுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.