நா இனிமே கமல்ஹாசன் ரசிகன்.. கவனம் ஈர்க்கும் சபா நாயகன் பட டிரைலர்...!


நா இனிமே கமல்ஹாசன் ரசிகன்.. கவனம் ஈர்க்கும் சபா நாயகன் பட டிரைலர்...!
x

அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழில் 'சூதுகவ்வும்' படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்தது. மேலும் நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'சபா நாயகன்'. மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரும் இன்று வெளியாகி உள்ளது. படத்தின் டிரைலர் முழுவதும் காதல் குறித்த பன்ச் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story