குடிகாரர்களுக்கான விழிப்புணர்வு படம்


குடிகாரர்களுக்கான விழிப்புணர்வு படம்
x

குடிகாரர்களுக்கான விழிப்புணர்வு படமாக `கிளாஸ்மேட்ஸ்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

இந்தப்படத்தை ஷரவணசக்தி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதில் நாயகனாக அங்கயற்கண்ணன், நாயகியாக பிரணா ஆகியோர் நடித்துள்ளனர். மயில்சாமி, சாம்ஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். படம் குறித்து ஷரவணசக்தி கூறும்போது, ``இரண்டு குடிகாரர்கள் பற்றிய கதையே இந்தப்படம். அவர்களால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை திரைக் கதையாக்கி உள்ளோம். குடிகாரர்கள் இருவர், தங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரையே பெரிய குடிகாரராக மாற்றுகின்றனர். இந்த இரு குடிகாரர்களாலும் வீட்டில் நிகழும் கஷ்டங்கள், பாட்டில்களை வீசி உடைப்பதால்; மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் காட்சிப்படுத்தி உள்ளோம். குடிகாரர்கள் திருந்துவதற்கான விழிப்புணர்வு படமாகவும் இருக்கும்'' என்றார். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாங்கிட்டும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.


Next Story