'பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது' - ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்


பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது - ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்
x

பவதாரிணியின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி, கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்லையில், இலங்கையில் கடந்த 25-ந்தேதி மாலை 5.30 மணியளவில் பவதாரிணி காலமானார். அவருக்கு வயது 47.

இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா... மஸ்தானா...' பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு பவதாரிணி அறிமுகமானார். தொடர்ந்து காதலுக்கு மரியாதை படத்தில் 'என்னை தாலாட்ட வருவாளா', அழகி படத்தில் 'ஒளியிலே தெரிவது தேவதையா', காக்க காக்க படத்தில் 'என்னை கொஞ்சம் மாற்றி', தாமிரபரணி படத்தில் 'தாலியே தேவையில்ல', ஆயுத எழுத்து படத்தில் 'யாக்கை திரி', மாநாடு படத்தில் 'மெஹரசைலா' உள்பட ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் பல பாடல்களை பவதாரிணி பாடியுள்ளார்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது சொந்த ஊரான தேனியில் பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் பவதாரணியின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக்

ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோருடன் இந்த துயரமான நேரத்தில் நாங்கள் உடன் இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story