அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லன் யார்? வெளியான தகவல்


அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் வில்லன் யார்? வெளியான தகவல்
x

'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடிக்க இரண்டு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வருகின்றார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அஜித்தின் 63வது படத்தை . 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக யார் நடிப்பது என்பது குறித்து இரண்டு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் நடித்த பாபி தியோல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபி தியோல் தமிழில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story