சேரி மொழியில் பேச முடியாது - குஷ்பூ கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு


சேரி மொழியில் பேச முடியாது - குஷ்பூ கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
x

குஷ்பூ தனது பதிவில், 'சேரி மொழி' என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மன்சூர் அலி கான் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த குஷ்பூ, "திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண் விழித்துப் பாருங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது" என பதிவிட்டிருந்தார்.

குஷ்பூ தனது பதிவில், 'சேரி மொழி' என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு 'சேரி மொழி' என முத்திரை குத்துகிறார் குஷ்பூ, குஷ்பூ தனது வார்த்தைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கடும் எதிர்வினைகள் எழுந்தன.

1 More update

Next Story