வெளியானது 'கேப்டன் மில்லர்'... மகிழ்ச்சியில் பிரியங்கா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள்...!


வெளியானது கேப்டன் மில்லர்... மகிழ்ச்சியில் பிரியங்கா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள்...!
x

ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' தர சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதற்கிடையே கடும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. முதல் காட்சியில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் படப்பிடிப்பு தள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அந்த பதிவில், 'இறுதியாக கேப்டன் மில்லர் படத்தை நீங்கள் அனைவரும் காணும் நாள் வந்துவிட்டது. இதுபோன்ற ஒரு அற்புதமான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாங்கள் உருவாக்கிய இனிமையான நினைவுகளுக்கும் நான் கற்றுக்கொண்ட அனைத்து பாடங்களுக்கும் இந்த படம் உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும். நீங்கள் ஒவ்வொருவரும் திரையரங்குகளில் திரைப்படத்தை ரசிப்பீர்கள், அதில் ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்பிய அளவுக்கு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story