சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்: ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்..!


சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்: ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்..!
x

சந்திரமுகி 2 படப்பிடிப்பு இன்று தொடங்கும் நிலையில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.

அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த நிலையில், சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் இன்று தொடங்கவுள்ளது. இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Next Story