சீயான் 62 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது


சீயான் 62 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
x
தினத்தந்தி 17 April 2024 6:24 PM IST (Updated: 17 April 2024 7:02 PM IST)
t-max-icont-min-icon

சீயான் 62 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சீயான் 62 என பெயரிட்டிருந்தனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

மேலும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகிறது. இதுவரை இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதில், இப்படத்திற்கு வீர தீர சூரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story