ஷாருக்கானுடன் என்னை ஒப்பிடுவதா? - துல்கர் சல்மான்


ஷாருக்கானுடன் என்னை ஒப்பிடுவதா? - துல்கர் சல்மான்
x

துல்கர் சல்மான்தான் தென்னிந்தியாவின் அடுத்த ஷாருக்கான் என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இதற்கு பதில் அளித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகனாக துல்கர் சல்மான் இருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து இந்தி படங்களிலும் நடிக்க துல்கர் சல்மானுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் 'சீதா ராமம்' படம், ஷாருக்கான் நடித்த 'வீர் ஜாரா' படத்தைப் போல் இருப்பதாகவும், துல்கர் சல்மான்தான் தென்னிந்தியாவின் அடுத்த ஷாருக்கான் என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இதற்கு பதில் அளித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

"நான் ஷாருக்கானின் பெரிய ரசிகன். அவர் எல்லோருக்கும் ரோல் மாடல். அவர் மக்களிடம் நடந்து கொள்ளும் விதம், பெண்களை நடத்தும் விதத்தை பார்த்து வியந்து இருக்கிறேன். அவரது படங்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன்.

என்னுடைய நடிப்பில் அவரது நடிப்பின் தாக்கம் இருக்கலாம். என்னை அறியாமலேயே அது என்னிடம் இருக்கிறது. என்னை அவருடன் ஒப்பிடுவது அவரை அவமதிப்பது போல ஆகும். ஏனென்றால் எப்போதும் இங்கு ஒரே ஷாருக்கான்தான்".


Next Story