'தங்கலான்' படத்துக்கு தனுஷ், மாரி செல்வராஜ் வாழ்த்து


தங்கலான் படத்துக்கு தனுஷ், மாரி செல்வராஜ் வாழ்த்து
x

'தங்கலான்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தங்கலான் படக்குழுவுக்கு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தனுஷ் வெளியிட்ட பதிவில், "எனக்கு தெரிந்த மிக கடினமாக உழைக்கும் நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரமின் 'தங்கலான்' ரிலீசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "லானே தங்கலானே வெல்கவே நீ ஆதியோனே. வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் அண்ணா, விக்ரம் சார். பெரும் உழைப்பின் வழி பெரும் வெற்றிக்கு தயாராகும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் பிரியமும்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story