அப்பளமாக நொறுங்கிய கார் : விபத்தில் உயிர் தப்பிய நடிகர்
விபத்தில் அப்பளமாக நொறுங்கிய காரில் பிரபல கன்னட நடிகர் பி.எஸ்.அவினாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பிரபல கன்னட நடிகர் பி.எஸ்.அவினாஷ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப்.2 படங்களில் ஆண்ட்ரூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். அவினாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து உடற்பயிற்சி கூடத்துக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகில் கார் வந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் அவினாஷ் வந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால் அவினாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அவினாஷ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''விபத்தில் எனது வாழ்நாள் முழுவதுக்குமான பயத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. சிக்னலை மீறி வேகமாக வந்த கண்டெய்னர் லாரி எனது கார் மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நடந்து விட்டது. கடவுள் அருளால் உயிர் தப்பினேன். கார் சேதம் அடைந்து விட்டது" என்று கூறியுள்ளார்.