கிரைம் திரில்லர் கதை


கிரைம் திரில்லர் கதை
x

‘மெரினா புரட்சி', ‘வலியோர் சிலர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நவீன் தற்போது ‘நியதி' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இதில் கோவிந்த மூர்த்தி, தேனி முருகன், திலீப், அஞ்சனாபாபு, கோபிகா சுரேஷ், அக்ஷயா, விஜய ரண தீரன், அருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீனியஸ் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது.

கதை நாயகனாக வரும் நவீன் துப்பறிவாளனாக பணிபுரிகிறார். மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பணியில் இருக்க, எதிர்பாராத விபத்தின் மூலமாக தானே ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்.

அந்த பிரச்சினையின் தீர்வை தேட முயல, அது இன்னொரு பிரச்சினை நீட்சியாக வருவதை கண்டறிகிறார். இரண்டு சம்பவங்களுக்கும் தீர்வை தேடுவதே கதையாக அமைத்து இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இசை: ஜாக் வாரியர், ஒளிப்பதிவு: பிரபு கண்ணன்.


Next Story