கவர்ச்சியில் கலக்கும் தர்ஷா குப்தா


கவர்ச்சியில் கலக்கும் தர்ஷா குப்தா
x

சினிமாவுக்கு வந்த புதிதிலேயே கவர்ச்சிப் பாதையை கையில் எடுத்து கவனம் ஈர்க்கும் நடிகையாக தர்ஷா குப்தா மாறிப் போயிருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஏராளமான நடிகைகள் தற்போது படையெடுத்து வருகிறார்கள். நயன்தாரா, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, நிவேதா தாமஸ் என பலரும் சின்னத்திரையில் கால் பதித்து, அதன் பின்னரே வெள்ளித்திரையில் தடம் பதித்தார்கள்.

செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், தற்போது முன்னணி கதாநாயகியாக கலக்கி வருகிறார். வாணி போஜன், அபிதா, மதுமிதா, சைத்ரா ரெட்டி சுஜாதா என ஏராளமானோரும் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து 'ருத்ர தாண்டவம்' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தர்ஷா குப்தா. தற்போது 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, "ரசிகர்களுக்கு பிடித்தமானதை செய்வதில் தவறு கிடையாது. ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள். நான் அவர்களை விரும்புகிறேன்" என்கிறார்.

சினிமாவுக்கு வந்த புதிதிலேயே கவர்ச்சிப் பாதையை கையில் எடுத்து கவனம் ஈர்க்கும் நடிகையாக தர்ஷா குப்தா மாறிப் போயிருக்கிறார்.

1 More update

Next Story