கொலை மிரட்டல்: சல்மான்கானுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


கொலை மிரட்டல்: சல்மான்கானுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
x

சல்மான்கானை மரணத்தில் இருந்து காப்பாற்றிவிட முடியாது என்று முகநூல் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

மும்பை

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் சல்மான்கானுக்கு, ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சல்மான்கானுக்கு முகநூல் மூலமாக மும்பையின் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயிடம் இருந்து கொலை மிரட்டல் வந்து இருக்கிறது.

பஞ்சாப் பாடகர் ஜிப்பி கிரெவல் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்பு படுத்தி, சல்மான்கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அந்த மிரட்டலில் 'சல்மான்கானை மரணத்தில் இருந்து காப்பாற்றிவிட முடியாது', என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது சிறையில் இருப்பதால் அவரது பெயரில் யார் இந்த மிரட்டலை விடுத்துள்ளனர் என்று மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக சல்மான்கானின் பாதுகாவலர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்து உள்ளனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் சல்மான்கானுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய நிகழ்வுகள் குறித்து போலீசாரிடம் தெரிவிக்கவும் அவரது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story