சிம்புதேவன்-யோகிபாபு கூட்டணியில் உருவாகும் 'போட்' திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு


சிம்புதேவன்-யோகிபாபு கூட்டணியில் உருவாகும் போட் திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு
x

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படத்துக்கு ‘போட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'அறை எண் 305-ல் கடவுள்', 'இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சிம்புதேவன். கடைசியாக 2015-ம் ஆண்டு விஜய்யை வைத்து 'புலி' படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து 'கசட தபற', 'விக்டிம்' போன்ற ஆந்தாலஜி படங்களை இயக்கினார்.

இதையடுத்து சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு 'போட்'(BOAT) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Next Story