'வாழை' படத்தின் 2-வது பாடல் வெளியானது


மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்திலிருந்து இரண்டாவதாக ‘ஒரு ஊருல ராஜா...’ என்ற பாடல் இன்று(ஜூலை 29) மாலை வெளியாகியுள்ளது.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார். இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை'. இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' படத்தை இயக்கி வருகிறார்.

மாரி செல்வராஜின் 'வாழை' படத்திலிருந்து முதல் பாடல், கடந்த 18-ஆம் தேதியன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படத்திலிருந்து இரண்டாவதாக 'ஒரு ஊருல ராஜா...' என்ற பாடல் இன்று(ஜூலை 29) மாலை வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாரயணன் பாடியுள்ள இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை இன்ஸ்டாகிராமில் படத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. 'காக்கா கத கேக்கும்போது யானை மூஞ்சு தெரியுதுயானைக் கத கேக்கும்போது பூனை சத்தம் கேக்குதுபூனைக் கத கேக்கும்போது தெருநாய் கொறைக்குது..' என குழந்தைகளை வெகுவாகக் கவரும் வரிகளை எழுதி பாடலாக வெளியிட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

சிறார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி வெளியாகவுள்ளது.


Next Story