இரண்டாவது நாயகியாக நடிப்பது வருத்தமா? நடிகை கேத்தரின் விளக்கம்
இரண்டாவது நாயகியாக நடிப்பது வருத்தமா இல்லை என நடிகை கேத்தரின் விளக்கம் அளித்துளார்.
தமிழில் மெட்ராஸ் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் கேத்தரின் தெரசா. கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். பள்ளி, கல்லூரி கால வாழ்க்கையை கேத்தரின் மலரும் நினைவுகளாக பகிர்ந்தார். அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் பிறந்து வளர்ந்தது துபாயில். பன்னிரண்டாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். ஆனால் நான் எப்போதும் கடைசி பெஞ்ச் மாணவிதான். அப்பா கண்டிப்பானவர். படிக்கும் நேரத்தில் டி.வி. பார்த்தால் அவ்வளவுதான். சிறுவயதில் பெற்றோருக்கு தெரியாமல் ஜீன்ஸ் வாங்கியதால் வீட்டில் பெரிய ரகளையே நடந்து விட்டது. எங்கு வாங்கினேனோ அங்கேயே கொண்டு திரும்ப கொடுத்து விட்டு வந்தேன். பெங்களூருவில் பட்டப் படிப்பு முடித்தேன். அங்குதான் முதல் முறை கன்னட படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. கமர்ஷியல் படங்கள் தான் எனக்கு கிடைக்கின்றன. தனியாக இல்லாமல் இன்னொரு கதாநாயகி யோடு சேர்ந்து நடிப்பது மாதிரியே வாய்ப்புகள் வருகின்றன. இதற்காக வருந்தவில்லை. ஸ்ரீதேவி, ஜெயசுதா, ஜெயபிரதா போன்றோர் இருவராகவும், மூன்று பேராகவும் ஒரே படத்தில் நடித்தவர்கள். எனவே இரண்டாவது கதாநாயகியாக நடிப்பது எனக்கொன்றும் கஷ்டமாக இல்லை" என்றார்.