எனக்கு நடிக்க தெரியவில்லை என்பதா? நடிகை ஜான்வி கபூர் வருத்தம்


எனக்கு நடிக்க தெரியவில்லை என்பதா? நடிகை ஜான்வி கபூர் வருத்தம்
x

எனக்கு நடிக்க தெரியவில்லை என்று சிலர் கேலி செய்தனர் என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். இந்தி திரையுலகில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தருவதாக எழுந்துள்ள விமர்சனத்தில் ஜான்வி கபூரும் சிக்கினார். அவருக்கு எதிராக வலைத்தளங்களில் தொடர்ந்து கேலியும், அவதூறுகளும் வெளியாகி வருகின்றன.இதுகுறித்து ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், "நான் எவ்வளவு உழைத்தாலும் சிலர் வேண்டுமென்றே பூதக்கண்ணாடியை வைத்து தவறுகளை தேடுகிறார்கள். மனதை நோகடிக்கும் வார்த்தைகளால் வேதனைப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்கும்போதும் எனக்குள் இருக்கும் நடிகையை மெருகேற்றிக் கொள்கிறேன். குறைகளை சரி செய்து கொள்கிறேன். இருந்தாலும் என் மீது விமர்சனங்கள் குறைந்த பாடில்லை. எனக்கு நடிக்க தெரியாது என்று கேலி செய்கிறார்கள். இந்த விமர்சனத்தை பார்த்து விரக்தி அடைந்து விட்டேன். என்னை கேலி செய்வதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.

எனது கெரியர் ஆரம்பித்த உடனே வாரிசு நடிகை என்று கேலி செய்தார்கள். எனது படம் ரிலீசாகும் ஒவ்வொரு முறையும் வேண்டுமென்றே விமர்சனம் செய்கிறார்கள். நடிக்கத் தெரியாதபோது சினிமாவில் எதற்கு நடிக்கிறாய் என்று நிறையபேர் கேலி செய்கிறார்கள். அவற்றைப் பார்த்து முதலில் மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால் இப்போது அதற்கு பழக்கப்பட்டு விட்டேன்'' என்றார்.

1 More update

Next Story