ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் 'திரிஷ்யம்'


ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்
x

‘திரிஷ்யம்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த 'திரிஷ்யம்' படம் வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி மகனை மீனா கொலை செய்கிறார். கொலையுண்டவன் பிணத்தை மறைத்து குடும்பத்தை காப்பாற்ற மோகன்லால் எப்படி போராடுகிறார் என்பது கதை.

'திரிஷ்யம்' படம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் ஆகி வரவேற்பை பெற்றது. இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வசூல் பார்த்தது. இந்தி பதிப்பில் அஜய்தேவ்கான், ஸ்ரேயா நடித்து இருந்தனர். மோகன்லால், மீனா நடிப்பில் 'திரிஷ்யம்' 2-ம் பாகமும் வெளியாகி இந்தியா முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த நிலையில் 'திரிஷ்யம்' படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. ஜப்பான், கொரிய மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்-நடிகை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.


Next Story