'தி பாய்ஸ் சீசன் 5' தொடரில் இணைந்த பிரபல நடிகர்


Famous actor who joined the series The Boys Season 5
x

'தி பாய்ஸ்' தொடரின் 5-வது மற்றும் கடைசி சீசன் உருவாகி வருகிறது.

சென்னை,

ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஹாலிவுட் தொடர்களில் ஒன்று 'தி பாய்ஸ்'. இந்த தொடரில் இருந்து கடைசியாக 4-வது சீசன் வெளியானது. இதில் வரும் பெரும்பாலான சூப்பர் ஹீரோக்கள் கருப்பு பக்கங்களை உடையவர்களாக உள்ளனர். மது, மாது, சூது என வாழும் இந்த சூப்பர் ஹீரோக்களால் பாதிக்கப்படும் சாமானியர்கள் ஒன்றுகூடி அவர்களை எதிர்த்து போராடுவதுதான் கதை.

இது சிறந்த இணையதொடருக்கான பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறது. இதன் தொடர் அமேசான் பிரைம் ஓ.டி.டியில் தமிழில் உள்ளது. தற்போது, இதன் 5-வது மற்றும் கடைசி சீசன் உருவாகி வருகிறது.

இதில், கார்ல் அர்பன், ஜாக் குவைட், ஆண்டனி ஸ்டார், எரின் மோரியார்டி, ஜெஸ்ஸி டி. அஷர், லாஸ் அலோன்சோ, சேஸ் கிராபோர்ட், டோமர் கபோன், கரேன் புகுஹாரா, கோல்பி மினிபை உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல நடிகர் டேவிட் டிக்ஸ் 'தி பாய்ஸ் சீசன் 5'-ல் இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர் பிளைண்ட் ஸ்பாட்டிங், ஸ்னோபியர்சர், வொண்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story