ஓடிடியில் வெளியானது பைட் கிளப் படம்


ஓடிடியில் வெளியானது பைட் கிளப் படம்
x

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட்டார்.

சென்னை,

அறிமுக இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்'. இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

முழுக்க ஆக்சன் அதிரடி திரைப்படமாக உருவாகியிருந்த இப்படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்தது. ரூ.3 கோடியில் உருவான இப்படம் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.


Next Story