சினிமா வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது - நடிகை ராஷிகன்னா


சினிமா வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது - நடிகை ராஷிகன்னா
x

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தற்போது அரண்மனை 4-ம் பாகம் பேய் படத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் மட்டும் தமிழ், தெலுங்கில் ராஷிகன்னா நடித்த 4 படங்கள் திரைக்கு வந்தன. தெலுங்கு படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், "நான் யாருடைய ஆதரவும், சினிமா பின்னணியும் இல்லாமலேயே திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்தேன். கதாநாயகியாக நல்ல பெயரை தக்க வைத்துக்கொண்டேன். வெற்றிகள் வரும்போது எனது அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை. ஆனாலும் நடிகையாக நான் எதிர்பார்ப்பது ரசிகர்கள் அன்பை பெறுவதைத்தான்.

நமது திறமையை நாம் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது எனது கருத்து. நிரந்தரம் இல்லாத சினிமா துறை வாழ்க்கையில் கதாநாயகிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முடியாது. கதாநாயகியாக இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைத்து நல்ல நிலைக்கு செல்லலாம். வாய்ப்புகள் இல்லாமல் கூட போகலாம்'' என்றார்.


Next Story