படம் தோல்வியால் விரக்தி: வலைத்தளத்தை விட்டு விலகிய நடிகை


படம் தோல்வியால் விரக்தி: வலைத்தளத்தை விட்டு விலகிய நடிகை
x

படத்தின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக சார்மி அறிவித்துள்ளார்.

இந்தி, தெலுங்கில் வெளியான பல படங்கள் சமீப காலமாக தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த வரிசையில் விஜய்தேவரகொண்டா நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த லைகர் படமும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் லைகர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மி அதிர்ச்சியில் இருக்கிறார். படத்தின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக சார்மி அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் சார்மி வெளியிட்ட பதிவில், ''கொஞ்சம் அமைதியாகுங்கள் இளைஞர்களே, சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருக்க போகிறேன். எங்கள் பட நிறுவனத்தை மேலும் திடமாகவும், உயர்ந்த நிலையிலும் தயாராக்கிக்கொண்டு விரைவில் மீண்டும் திரும்பி வருவோம்" என தெரிவித்துள்ளார். லைகர் படத்துக்கு பெயர் அளவுக்கு பூரி ஜெகன்நாத்தை டைரக்டராக வைத்துக்கொண்டு சார்மிதான் முழு படத்தையும் இயக்கி இருக்கிறார் என்றும், அதனால்தான் படம் இவ்வளவு கேவலமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் வலைத்தளத்தில் சாடி வருவதால் விரக்தியாகி இந்த முடிவை அவர் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story