கடவுள் உருவ நெக்லஸ் சர்ச்சை... நடிகை டாப்சி மீது போலீசில் புகார்


கடவுள் உருவ நெக்லஸ் சர்ச்சை... நடிகை டாப்சி மீது போலீசில் புகார்
x

நடிகை டாப்சி சில தினங்களுக்கு முன்பு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் கவர்ச்சியாக அரைகுறை உடை அணிந்து இருந்தார்.

அதோடு கழுத்தில் பெண் கடவுள் லட்சுமி உருவம் பொறித்த நெக்லசையும் அணிந்திருந்தார்.

இது சர்ச்சையை கிளப்பியது. கவர்ச்சி உடையில் கடவுளின் உருவ நெக்லசை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டாப்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து ரக்சக் சங்கதன் அமைப்பை சேர்ந்த எக்லவியா சிங் கவுர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், "ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் டாப்சி கவர்ச்சியாக வந்து லட்சுமி தேவியின் உருவ நெக்லசை அணிந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது டாப்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story