தனுஷூடன் சண்டை போட்டு ஆறு வருடங்கள் பேசாமல் இருந்தேன்- ஜி.வி.பிரகாஷ்


தனுஷூடன் சண்டை போட்டு ஆறு வருடங்கள் பேசாமல் இருந்தேன்- ஜி.வி.பிரகாஷ்
x
தினத்தந்தி 4 April 2024 6:36 PM IST (Updated: 4 April 2024 7:11 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் தனுஷூடன் சண்டை போட்டு ஆறு வருடங்கள் பேசாமல் இருந்தேன். நண்பர்கள் என்றால் சண்டை வருவது சகஜம்தான் என்று ஜி.வி.பிரகாஷ் பேசியுள்ளார்.

சென்னை,

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன', 'அசுரன்' எனத் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் அசத்தலான பின்னணி இசையும், பாடல்களையும் கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ். தனுஷ்- ஜி.வி.பிரகாஷ் காம்போவுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. சினிமாவைத் தாண்டியும் இவர்களுக்கு இடையில் நல்ல நட்பும் உண்டு. ஆனாலும் தாங்கள் இருவரும் சண்டைபோட்டு 6 வருடங்கள் பேசாமல் இருந்ததாக ஜி.வி.பிரகாஷ் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

அந்தப் பேட்டியில் அவர், "சில நடிகர்கள், இயக்குநர்களுடன் மட்டும் தான் சினிமாவைத் தாண்டிய நட்பு அமையும். அப்படியான நல்ல நட்பு எனக்கும் தனுஷூக்கும் உண்டு. நண்பர்கள் என்றால் சண்டை வருவதும் சகஜம்தானே! அப்படித்தான் சில காரணங்களால் எனக்கும் தனுஷூக்கும் சண்டை வந்தது. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் பேசாமல் இருந்தோம். அதன் பிறகு இப்போது எல்லாப் பிரச்சினைகளும் சரியாகி விட்டது. பழையபடி நாங்கள் நல்ல நண்பர்கள்" எனக் கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 'கள்வன்' படம் ஏப்ரல் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story