ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'டியர்' படத்தின் டிரைலர் வெளியானது


ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள டியர் படத்தின் டிரைலர் வெளியானது
x

'டியர்' திரைப்படம் வருகிற 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'டியர்'. இந்த படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரான ஜி.வி.பிரகாஷுக்கு ஐஸ்வர்யா ராஜேஷுடன் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யாவுக்கு தூங்கும்போது குறட்டை விடும் பிரச்சனை இருப்பது திருமணத்துக்குப் பிறகு தெரிய வருகிறது.

இதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'டியர்' திரைப்படம் வருகிற 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Next Story