ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபெல்' படத்தின் டிரைலர் வெளியானது


ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ரெபெல் படத்தின் டிரைலர் வெளியானது
x

'ரெபெல்' திரைப்படம் வருகிற மார்ச் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரெபெல்' திரைப்படம் வருகிற மார்ச் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


Next Story