ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25-வது படம்; நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்


ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25-வது படம்; நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்
x

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

சென்னை,

இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், 'பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கும் 'கிங்க்ஸ்டன்' திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் 25-வது திரைப்படமாகும். இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடிக்கிறார். அதோடு 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, 'கல்லூரி' வினோத், சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் சபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். தீவிக் வசனம் எழுதுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த படத்தை 'ஜீ ஸ்டுடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story