அரைகுறை ஆடை சர்ச்சை: மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை


அரைகுறை ஆடை சர்ச்சை: மன்னிப்பு கேட்ட கவர்ச்சி நடிகை
x

இந்தி நடிகை உர்பி ஜாவேத். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.

உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிளுகிளு படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

இதுகுறித்து வலைத்தளத்தில் உர்பி ஜாவேத் வெளியிட்டுள்ள பதிவில், "நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்'' என்று கூறியுள்ளார். அவரது முடிவை பலர் பாராட்டி உள்ளனர். இன்னும் சிலர் உர்பி ஜாவேத் சொன்னதை நம்பாமல் ஏப்ரல் 1-ந் தேதி என்பதால் முட்டாளாக்க பொய் சொல்கிறார் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

1 More update

Next Story