இளையராஜாவுக்கு பாடகி் சித்ரா பிறந்தநாள் வாழ்த்து


இளையராஜாவுக்கு சித்ரா பிறந்தநாள் வாழ்த்து
x

ஆரோக்கியமான மற்றும் அமைதியான இசை வாழ்க்கையை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும் என்று இளையராஜாவுக்கு பாடகி் சித்ரா பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை,

இளையராஜாவின் 81வது பிறந்த நாளை ரசிகர்கள் இணையத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மகளை பறிகொடுத்துவிட்டதால், பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பாடகி சித்ரா கூறியதாவது:-

எங்கள் அன்புக்குரிய ராஜா சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட மகிழ்ச்சியான ஆரோக்கியமான மற்றும் அமைதியான இசை வாழ்க்கையை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும். உங்கள் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் சார் என பதிவிட்டுள்ளார்.

பாடகி சித்ரா அழகான பாடல் ஒன்றை பாடி இசை ஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story