ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!


ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
x

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

சென்னை,

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் வருகிற 17-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story