அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 'ஹாரி பாட்டர்' வரைபடம்


அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஹாரி பாட்டர் வரைபடம்
x

ஹாரி பாட்டர் தொடர்பான படைப்புக்களில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஒன்றாக இது அமைந்துள்ளது.

நியூயார்க்,

புகழ்பெற்ற ஹாரி பாட்டர் திரைப்படத்தின் காட்சியை விளக்கும் வரைபடம் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. ஹாரி பாட்டர் தொடர்பான படைப்புக்களில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஒன்றாக இது அமைந்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஏல விற்பனை நிகழ்வொன்றில் இந்த வரைபடம் 1.9 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகியுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட விலையை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

ஹாரி பாட்டர் புத்தக தொடர் நிறைவடைவதற்கு முன்னர் இந்த வரைபடம் 2001ம் முதன்முறையாக ஏலமிடப்பட்டிருந்தது.

1 More update

Next Story