'அவர் சாதாரண நடிகர் கிடையாது' - ரஜினிகாந்த் பாராட்டியது யாரை தெரியுமா?


He is not an ordinary actor - Do you know who praised Rajinikanth?
x

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நல்ல நடிகருடன் பணிபுரிந்ததாக ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'பேட்ட'. ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதியை பாராட்டி இருந்தார். அவர் பேசுகையில்,

'ஜித்துவின் கதாபாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. அப்போதுதான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதியை பரிந்துரைத்தார். விஜய் சேதுபதி சாதாரண நடிகர் கிடையாது. அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு அசாதாரண நடிகர், நீண்ட நாட்களுக்குப் பிறகு, நான் ஒரு நல்ல நடிகருடன் பணிபுரிந்ததாக உணர்ந்தேன்,'என்றார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளியானது. இதில் காளி வேடத்தில் ரஜினிகாந்த்தும், ஜித்துவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். மேலும், திரிஷா, மாளவிகா மோகனன் ஆகியோருடன் நவாசுதீன் சித்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

1 More update

Next Story